கடவுச்சீட்டுக்கான விண்ணப்பம் (தற்போதைய கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் கடந்திருந்தால்)

///கடவுச்சீட்டுக்கான விண்ணப்பம் (தற்போதைய கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் கடந்திருந்தால்)
கடவுச்சீட்டுக்கான விண்ணப்பம் (தற்போதைய கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் கடந்திருந்தால்) 2019-08-07T08:44:17+00:00

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பம் (தற்போதைய கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் கடந்திருந்தால்)

Application-for-New-Passport

பரம்பரையாக அல்லது பதிவின் மூலம் இலங்கை பிரசையான ஒருவருக்கு இலங்கை கடவுச்சீட்டொன்றுக்காக விண்ணப்பிக்கலாம். கடவுச்சீட்டொன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து பத்து (10) வருட காலத்திற்கு செல்லுபடியாகும். வழங்கப்பட்ட திகதியிலிருந்து பத்து (10) வருட காலம் முடிவடைந்தமையினால் அல்லது விசா சான்றிதழுக்காக மேலும் பக்கங்கள் இல்லாமையினால் புதிய கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

  1. முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவும் – (விண்ணப்பப்படிவத்திற்கு (A) என்பதை Click செய்யவும்.)
  2. அண்மையில் பெறப்பட்ட மூன்று (03) புகைப்படங்கள் – (கலர், வௌ்ளைப் பின்னணி, 3.5 செ.மீ X 4.5செ.மீ அல்லது 2”X2”)
  3. அண்மைக்கால கடவுச்சீட்டு.
  4. கடவுச்சீட்டின் பிரதிகள்
    • புகைப்படம் உள்ள பக்கம் – 2 பிரதிகள்
    • விசா பக்கங்கள் – 2 பிரதிகள்
    • மாற்றங்கள் மற்றும் அவதானிப்புரைகள் பக்கம் (பக்க இலக்கம் 4-5) – 2 பிரதிகள்
  • சகல நாடுகளுக்கான கடவுச்சீட்டு – 580 ஐக்கிய அரபு இராச்சிய டிராம்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரடியாக கையளிக்க வேண்டுமென்பதை தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.

வாரங்கள் 08 – 10

  1. இயலுமானவரை விண்ணப்பத்தை ஆங்கில கெப்பிட்டல் எழுத்தில் பூர்த்தி செய்தல் வேண்டும்.
  2. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மூன்று (03) புகைப்படங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். புகைப்படங்களுக்கு உடனடுத்து கீழேயுள்ள பெட்டிகளில் மாத்திரம் கையொப்பம் உள்ளடங்குவதனை உறுதி செய்து கொள்ளவும்.
  3. புகைப்படமானது தௌிவாகவும் சிறந்த தரத்திலும் அண்மையில் பெற்றுக் கொள்ளப்பட்டதுமாக இருத்தல் வேண்டுமென்பதோடு, மூக்குக்கண்ணாடி அணியாமலும் திறந்த கண்களுடனும் நெற்றி தௌிவாகவும் இருத்தல் வேண்டும்.
  4. விண்ணப்பப்படிவமானது மூல ஆவணங்கள் மற்றும் அவற்றின் பிரதிகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தின் கொன்சியூலர் பிரிவிற்கு வருகை தந்து தங்களுக்கு விண்ணப்பங்களை கையளிக்கலாம். கொன்சியூலர் பிரிவானது திங்கட்கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை திறந்திருக்கும். (மு.ப.8.30 மணியிலிருந்து பி.ப.1.00 மணிவரை)

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரடியாக கையளிக்க வேண்டுமென்பதை தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.
Office_Hours
X